Header Ads

குடமுருட்டி ஜீயபுரம் இடையே குறுகலான சாலை சீரமைக்க ரூ.30 கோடியில் திட்ட மதிப்பீடு

Image result for karur road jeeyapuram

குடமுருட்டி- ஜீயபுரம் இடையே சாலை சீரமைக்க ரூ.30கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி -கரூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் குடமுருட்டி சோதனை சாவடியில் இருந்து ஜீயபுரம் வரை சாலை குறுகலாக உள்ளதால் நிலம் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் இருந்தது. சோதனை சாவடி அருகில் உள்ள குடமுருட்டி பாலமும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. 

இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தவிர ஜீயபுரம் வரை பல இடங்களில் சாலை மோசமாகவும், குறுகலாகவும், அபாயகரமான வளைவுகளும் உள்ளன. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. விபத்தை தடுக்க போலீசார் இரும்பு தடுப்புகளை சென்டர் மீடியன்போல் பல இடங்களில் அமைத்துள்ளனர். எனினும் அந்த தடுப்புகள் மீதே வாகனங்கள் மோதி, விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. 

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் குடமுருட்டி பாலம் முதல் ஜீயபுரத்தில் இருந்து அரை கிமீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை துவங்கும் இடம் வரை ரூ.30 கோடியில் சாலை விரிவாக்கம், தேவைப்படும் இடங்களில் சிறு பாலம் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்து அதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையில் குடமுருட்டி பாலத்தை புதிதாக ரூ.6 கோடியில் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தால், திருச்சி- கரூர் இடையிலான பயண நேரம் வெகுவாக குறைவதுடன், விபத்துக்களும் கணிசமாக குறையும்

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=768130

No comments

Powered by Blogger.