Header Ads

திருச்சியை தூய்மை நகராக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

Image result for trichy swachh bharat

இவ்வாண்டு 4041 நகரங்களுடன் போட்டியிடுவதால் திருச்சியை தூய்மை நகராகமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி ஸ்வச்சதா ஆப் (செயலி பதிவிறக்கம்) குறித்த விளக்க கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த ஆண்டு 500 நகரங்களுடன் திருச்சி மாநகராட்சி  போட்டியிட்டு தூய்மையான மாநகராட்சியாக 6வது இடம் பெற்றோம்.  இந்த ஆண்டு 4041 நகரங்களுடன் போட்டியிடுகிறோம்.  இந்திய அளவில் தூய்மையான மாநகரமாக  முதல் இடம் பெறுவதற்கு பொதுமக்கள் தாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

தூய்மையான நகரங்களில் முதல் இடம் பெறுவதற்கு தங்களது  ஆன்ட்ராய்டு மொபைல் போனில் ஸவச்சதா ஆப் செயலியினை பதிவிறக்கம் செய்து  தங்களது பகுதியில் உள்ள பொது சுகாதார குறைபாடுகளை இச்செயலின் மூலம்  புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் தங்களது  வீடுகளில் உருவாகும் குப்பைகளை தாங்களாகவே தரம் பிரித்து இம்மாந கராட்சி  துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொது இடங்களில் உள்ள குப்பை  தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.  

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநகரமாக திருச்சி மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள்  திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை வேந்தர் மீனா, யுகா அமைப்பு நிர்வாகி அல்லிராணி ஆகியோரும் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் எக்ஸ்னோரா அமைப்பு உறுப்பினர்கள்,  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், யுகா அமைப்பு உறுப் பினர்கள் மற்றும்  திருச்சி அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் நிகழ்த்திய தூய்மை இந்தியா குறித்தான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

No comments

Powered by Blogger.