Header Ads

ராமசந்திரா நகர் மாநகராட்சி பசுமை பூங்காவில் ஆம்பி தியேட்டர் பணி மும்முரம்


Image result for amphi theatre trichy
(Representative image)

திருச்சி மாநகராட்சி ராமச்சந்திரா நகர் மாநகராட்சி பூங்காவில் ஆம்பி தியேட்டர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த படம்: நடைபாதை  பணிகள் நிறைவடைந்துள்ளது.திருச்சி: திருச்சி மாநகராட்சி ராமசந்திரா நகர் பகுதியில் உள்ள  பசுமை பூங்காவில் பேவர் பிளாக் நடைபாதை, ஆம்பி தியேட்டர்  கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் பொன்மலை கோட்டம் ராமசந்திரா நகர் அருகில் 22.5 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அதிகளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை, சைக்கிள் ஓட்டும் தளம், சிறுவர் விளையாட்டு ஆகியவை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக அதிசயங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் பூங்காவிற்கு வந்து செல்லும் பொழுதுபோக்கும் இடமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு  தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிக பரப்பளவு கொண்ட  பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு. ராமசந்திரா நகர், எ.புதூர், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது.  பொதுமக்களிடையே இந்த பூங்கா நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மாலை நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவியத்  தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அம்ரூத் என்ற திட்டத்தின் மூலம் பசுமை பூங்காவிற்கு ரூ.93.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.40 லட்சத்திற்கு ஆம்பி தியேட்டர் 39  மீட்டர் வட்ட சுற்றளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அமர்ந்து  நிகழ்ச்சிகளை காண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் ரூ.53.60 லட்சம் மதிப்பில் 700 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2 நடைபாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இந்த இரண்டு  பணிகளில் இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபயிற்சி செய்பவர்களிடம் நடக்கும் வழிப்பறிகள் இங்கு தவிர்க்கப்பட்டு  பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் குவிகின்றனர். மேலும் ஆம்பி தியேட்டர்  அமைக்கப்பட்டால் மேலும் பொதுமக்களின் வரவேற்பை பெறும்.

No comments

Powered by Blogger.