Header Ads

புதிய முனையம் அமைக்க ரூ.850 கோடி நிதி ஒதுக்கீடு திருச்சி விமான நிலைய இயக்குனர் தகவல்

Image result for trichy airportதிருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி - சென்னை புதிய விமானம் வருகிற 31ம் தேதி காலை 7.05 மணிக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏர் இந்தியாவின் சார்பு நிறுவனமான அலையன்ஸ் ஏர்வேஸ் தினசரியாக இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 72 இருக்கைகள் கொண்டது. திருச்சி- பாங்காக் விமான சேவையை தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி அதிகாலை 12.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

வாரத்திற்கு 4 நாட்கள் இவ்விமானம் இயக்கப்படும். திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு மொத்தம் 345 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 228 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 2 வாரங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு வருடத்திற்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும்.

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க ரூ.850 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்படும். 2018 ஜூன் மாதம் முதல் இதற்கான களப்பணிகள் துவங்கும். இந்த வருடம் மாதத்திற்கு 600 டன் சரக்கு சேவை உள்ளது. சரக்கு சேவை 8000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை அதிகரித்துள்ளதால் இலக்கு எட்டப்படும். என தெரிவித்தார்

No comments

Powered by Blogger.