Header Ads

மணப்பாறை- கல்பட்டி இருவழிப்பாதை பணி நிறைவு இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்

Image result for mannaparai double line railwaysமணப்பாறையில் இருந்து கல்பட்டி வரை இரு வழிப்பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரை இருவழிப் பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிலிருந்து தாமரைப்பாடி வரையிலான சுமார் 10 கிமீ தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. 

2வது கட்டமாக மணப்பாறையிலிருந்து கல்பட்டி வரையிலான சுமார் 30 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதையடுத்து  இன்ஜினை மட்டும் கல்பட்டியிலிருந்து மணப்பாறை வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இப்பணிகளை நிர்மாணித்து வரும் ரயில் விகாஸ் நிகர் லிமிடெட்டின் உதவி பொது மேலாளர் சங்கர், துணைமேலாளர் சண்முகவேல், டிராக் ஆய்வாளர் மாடசாமி, திட்ட மேலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணியினை மேற்பார்வையிட்டனர். 
மார்ச் 31ம் தேதி இப்பாதை ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது. அன்று ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் உயர்மட்ட பொறியாளர்கள் புதிய வழித்தடத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளனர்.

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=698978

No comments

Powered by Blogger.