Header Ads

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க ரூ.8.94 கோடியில் செயல்திட்டம்

Image result for trichy water supplyதிருச்சி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க ரூ.8.94 கோடி மதிப்பில் தற்காலிக செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க தற்காலிக செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 44 பணிகளுக்கு ரு.70 லட்சம் மதிப்பீட்டிலும், இதர திட்டங்களின் கீழ் 519 பணிகளுக்கு ரு.8.24 கோடி மதிப்பீட்டிலும், குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.4.94 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ரூ.32.20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுததுதல், ரூ.18.05 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் திறன் அதிகப்படுத்துதல், ரூ.55.73 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறுகள் அமைத்தல், ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் என மொத்தம் ரு.8.94 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் கோடைகாலத்தின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏதும் இல்லாமல் சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டாலோ அல்லது குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏதும் இருந்தாலோ, திருச்சி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் 8220846499 என்ற அலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 4851 என்ற எண்களில் தொடர்பு கொள்ள கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=698972

No comments

Powered by Blogger.