Header Ads

உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க

உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கதிருச்சி வயலூர்ரோட்டில் உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி, 

உய்யகொண்டான் வாய்க்கால் பாலம்

திருச்சி வயலூர்ரோட்டில் உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பாலம் குறுகலாக இருப்பதால் அடிக்கடி அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் தொடங்கும் போக்குவரத்து நெரிசல் புத்தூர் நான்குரோடு வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகர போக்குவரத்து போலீசார் மாற்று ஏற்பாடு செய்து உள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

திருச்சி சோமரசம்பேட்டையில் இருந்து வயலூர்ரோடு வழியாக மாநகருக்குள் வரும் வாகனங்கள் உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் வந்தவுடன் இடதுபுறமாக கீழே இறங்கி பழைய பாலம் வழியாக சென்று மீண்டும் வயலூர்ரோட்டை அடைந்து மாநகருக்குள் செல்ல வேண்டும். இதேபோல் புத்தூரில் இருந்து செல்லும் வாகனங்கள் உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் வழியாக நேராக சென்று விட வேண்டும்.

இதன் மூலம் அங்கு பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் போக்குவரத்து மாற்றத்தை நேற்று மாலை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். அப்போது போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் சத்திநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/02/09022031/Drain-the-bridge-a-lane-change-to-avoid-traffic-jams.vpf

No comments

Powered by Blogger.