Header Ads

சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ் மற்றும் கார், வேன்களில் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவிலை சுற்றி மற்றும் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக கோவில் இணை ஆணையராக இருந்த தென்னரசு, மாரியம்மன் கோவிலை சுற்றிலும், கடை வீதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்றி நடவடிக்கை எடுத்து 2 மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

சட்டப்படி நடவடிக்கை

இதைத்தொடர்ந்து ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன், மாநில நெடுஞ்சாலைத்துறை மண்ணச்சநல்லூர் உதவி செயற்பொறியாளர் விவேகானந்தன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகள் பற்றிய குறியீடு செய்ததுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென்று அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சமயபுரம் கடைவீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் முன்பு போடப்பட்டிருந்த சிமெண்டு கொட்டகைகள், சிமெண்டு சிலாப்புகள் போன்றவற்றை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.

இது குறித்து உதவி செயற்பொறியாளர் விவேகானந்தன் கூறுகையில், “மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களே அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி எடுக்கவில்லை என்றால் அடுத்தவாரம் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source:https://www.blogger.com/blogger.g?blogID=2385823035835988869#editor/target=post;postID=546124970004329351

No comments

Powered by Blogger.