Header Ads

பராமரிப்பில்லாத முக்கொம்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Related imageதிருச்சி:  பொதுப்பணித்துறையினர் பராமரிக்காததால் முக்ெகாம்பு பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், நீருற்றுகள் பழுதடைந்து வெறும் காட்சிப்பொருட்களாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருச்சி மாவட்ட மக்களின் பிரதான பொழுபோக்கு சுற்றுலா தலமாக விளங்குவது முக்கொம்பு அணை ஆகும். காவிரியாற்றில் தண்ணீர் வரும் காலத்தில் முக்கொம்பின் அணையின் ஷட்டர்களில் வழியாக வெளியேறும் தண்ணீர் அணையின் மேல் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் மீது தூறலாக விழும். மேலும், முக்கொம்பில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும். அதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் முக்கொம்பு அணைக்கு விடுமுறை நாட்களில் வருவர். திருச்சி மாநகருக்கு பொழுது போக்கு அம்சம் ஒன்று என்றால் அது முக்கொம்பு  மட்டும்தான். அந்த அளவிற்கு இயற்கை சூழலில் அமைந்துள்ள சிறந்த சுற்றுலாத்  தலமாகும் இது.

 விடுமுறை நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  முக்கொம்பிற்கு வந்து செல்வர். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக பொழுது போக்கு அம்சமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சுழலும் சிறுவர் ராட்டினம், ஊஞ்சல், பைபர் போர்டு சறுக்கல், நீர் ஊற்றுகள், சிறுவர் ரயில் உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பொழுது போக்கு பூங்காவை பொதுப்பணித்துறையினர் பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் சிறுவர்கள் விளையாடும் சுழலும் ராட்டினம், சிறுவர், பெரியவர் விளையாடும் ஊஞ்சல், ஏற்றம் இறக்கம், சிறுவர்கள் விளையாடும் பைபர் சறுக்கு விளையாட்டு கோபுரங்கள், பல்வேறு செயற்கை நீரூற்றுகள் ஆகியவை பழுதாகி பயன்பாட்டில்லாமல் வெறும் காட்சிப்பொருட்களாகவே உள்ளது. இதனால் முக்கொம்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பொழுது ேபாக்கு விளையாட்டு உபரகணங்கள் இல்லாததாலும், காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். தற்போது கோடைக்காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முக்கொம்பிற்கு வந்து செல்வர். கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து புதிய பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க முயற்சியை மேற்கொள்ளும் அரசு இருப்பதை சரி செய்தால் ஏராளமானோர் பயனடைவர்.எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து போர்க்கால அடிப்படையில் முக்கொம்பில் உள்ள பூங்காவில் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு, புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

No comments

Powered by Blogger.