Header Ads

அதிரடி மாற்றங்களுடன் திருச்சியில் களமிறங்கிய காவல் ஆணையர்

அதிரடி நடவடிக்கையின் முதல் மாற்றமாக காவல்துறையினா் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் அகற்றப்பட்டு வருகிறது. 


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி காவல்துறை ஆணையா் காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் காவல்துறையினர் தங்களுடைய இருசக்கர வாகனங்களிலோ, அல்லது காவல்துறையினரின் உறவினா்கள், நண்பா்கள், என யாருடைய வண்டிகளிலும் வண்டி எண்ணை தவிர வேறு ஸ்டிக்கா் இருக்க கூடாது. 

முதலில் போலிஸ் என்று ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கா்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்த காவல்துறை ஆணையா் அருண் வெளியே சிங்க முகம் போட்டு, போலிஸ் ஸ்டிக்கா் ஓட்டப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தை கவனித்து கொண்டே உள்ளே சென்றவா். அந்த வாகனம் குறித்து விசாரித்துள்ளார். 

அங்கு பணியாற்றி வரும் காவலரின் வாகனத்தை உறுதி செய்த அவா் உடனடியாக அவருக்கு மெமோ வழங்கி உள்ளார். 

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வரும் மனுதாரா்களை இன்முகத்துடன் வரவேற்று அவா்களுடைய புகார் மனுக்களை முறையாக பெற்று மனுரசீது கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இதற்கு தனி அறை ஒதுக்கி உதவி ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து அறிய சாதாரண உடையில் இருச்சர வாகனத்தில் சென்று அவா்களது நடவடிக்கையை கண்காணித்துவிட்டு பின்னர் சீருடையில் சென்று நேரடியாக அவா்களை அழைத்து கண்டிப்பதால் காவல்துறையினா் எப்போதும் தங்களுடைய பணிகளை கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றனா். 

புகார் கொடுத்து அதன் மீது நடவடிக்கை இல்லை என்றால் உடனடியாக ஆணையரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினா் சாதாரண உடையில் வலம் வர வேண்டும் என்றும், கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்க கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை மட்டுமின்றி மக்களின் பாதுகாப்பு தொடர்பான எல்லா நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனா்.

Source:http://tamil.eenaduindia.com/Trichy/TrichyCity/2017/03/21112112/Quick-police-action-backfires-on-cops.vpf

No comments

Powered by Blogger.