Header Ads

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்: திருச்சிக்கு 5,362 வீடுகள் ஒதுக்கீடு

 Image result for prime minister housing scheme

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2017-18ம் ஆண்டிற்கு திருச்சிக்கு 5,362 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டித் தருவதற்கு தகுதியானவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்த ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு வறுமை கோட்டிற்கு கீழ், உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் 40 விழுக்காடு பிற வகுப்பினை சார்ந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். 

இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.1,70,000. இத்தொகை கட்டுமான முன்னேற்றத்தின் அடிப்படையில் 4 தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 கூடுதலாக வழங்கப்படுகிறது. 2017-18ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்திற்கு 5,362 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு மொத்தம் 3,379 வீடுகளும் இதர பிரிவின ருக்கு 2,253 வீடுகளும் அடங்கும். 

தகுதியானவர்கள், தங்களிடமுள்ள வீட்டுமனைப்பட்டா, ஆதார் அட்டை, வங்கி புத்தக நகல் போன்ற ஆவணங்களுடன் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியோரிடம் விண்ணப்பங்களை அளித்து வீடு கட்டி பயனடையலாம் என்று கலெக்டர் ராஜாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

source

No comments

Powered by Blogger.