Header Ads

திருச்சி வழியாக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்

Image result for trichy special train
திருச்சி: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு (வண்டி எண்06001) சிறப்பு கட்டண ரயில் வரும் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு சென்றடையும். மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு (வண்டி எண்.06002) ஜூலை 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், நெல்லையில் இருந்து எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில்  வரும் ஜூலை 9ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை ரயில்நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.