Header Ads

ரூ.2.78 கோடியில் விவசாய சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட பூமிபூஜை

Related image
(File Photo)

மண்ணச்சநல்லூரில் ரூ.2.78 கோடியில் விவசாய சேமிப்பு கிடங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் துவக்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு பகுதியில் 5 ஏக்கரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு அரசு ஆணை பெறப்பட்டு ரூ.2.78 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. பூமிபூஜையை எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் துவக்கி வைத்தார்.  வேளாண்மைத்துறை துணை இயக்குநர் கைலாசபதி, உதவி பொறியாளர் முருகன், அதிமுக நகர செயலாளர் துரை.சக்திவேல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ரமேஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=778029

No comments

Powered by Blogger.