Header Ads

24ம் தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்


Image result for job fair trichy
(File Photo)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலெட்சுமி தெரிவித்துள்ளதாவது: வரும்  24ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக புதிய கட்டிடம், கஸ்தூரி ஹால் ரோடு, வட்டாட்சியர் அலுவலகம் (திருச்சி மேற்கு) பின்புறம், என்ற முகவரியில் இம்முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 8,10, 12ம் வகுப்பு, கலை, அறிவியல் பட்டதாரிகள், ஐ.டி.ஐ. படித்த இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.