Header Ads

தலைமை தபால் நிலையத்தில் பன்னாட்டு தபால், பார்சல் பதிவு மையம் இன்று திறப்பு

Image result for hEAD POST OFFICE TRICHYதிருச்சி தலைமை தபால் நிலையத்தில் பன்னாட்டு தபால், பார்சல் பதிவு மையம் இன்று திறக்கப்படுகிறது.அஞ்சல் துறை மூலம்  வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி இருந்து வருகிறது. இதன் மூலம் நாம் அனுப்பக்கூடிய பொருட்களில் நாமே கவர் ஒட்டி அட்டை பெட்டிகளில்  அடைத்து கவர் மற்றும் அட்டை பெட்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இப்படி அனுப்பு வர்கள் சாதாரணமாகவே அஞ்சல்களை அனுப்பும் வரிசையில் நின்று  அனுப்பி வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி தலைமை தபால் அஞ்சலகத்தில் பன்னாட்டு தபால் மற்றும் பார்சல் பதிவு மையம் இன்று துவக்கப்படுகிறது.  இதன்மூலம் பொருட்களை நாம் கொண்டு சென்றாலே போதும். அவர்களே பொருட்களின் தன்மை, எடைக்கேற்ப அங்கேயே பார்சல் செய்து தரப்படும். அதன் பின் பிரத்யேக பதிவு மையத்தில் நேரடியாக உரிய பணம் செலுத்தி பொருட்களை அனுப்பலாம். இந்த வசதி திருச்சி மண்டலத்தில் திருச்சி தலைமை  தபால் நிலையத்தில் முதன் முறையாக இன்று துவக்கப்படுகிறது. தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் சம்பத் துவக்கி வைக்கிறார். இந்த  சேவையால் திருச்சியில் இருந்து பொருட்களை வெளிநாடுகளுக்கு எளிதாக அனுப்ப முடியும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.