Header Ads

திருச்சி மத்திய சிறையை சுற்றிலும் 500 வீடுகளை இடித்துவிட்டு ரூ.10 கோடியில் சுற்றுச்சுவர் அரசுக்கு கருத்துரு

Image result for central jail trichyதிருச்சி மத்திய சிறையை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 500 வீடுகளை இடித்துவிட்டு ரூ.10 கோடியில் சுற்றுச்சுவர் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை புழல், மதுரை, திருச்சி உள்பட மொத்தம் 9 மத்திய சிறை சாலைகள் உள்ளது. இதில் திருச்சி மத்திய சிறையில் மத்திய மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 289 ஏக்கர் பரப்பிற்கிடையில் திருச்சி மத்திய சிறை அமைக்கப்பட்டுள்ளது. 

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=771386

திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1000மீ தூரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது. சிறையின் முன்புறம் உள்ள 1000மீ மற்றும் சுற்று பகுதிகளில் காலி இடமாக உள்ளது. இதில் முன்புறம் சிறைக்கு சொந்தமான இடத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சிறையின் முன் மற்றும் பக்கவாட்டு காலி இடங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் விவசாயம், காய்கறி தோட்டம், தென்னை, வாழை உள்ளிட்ட விளைபொருட்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. விளைபொருட்களை பயிரிட விவசாயம் தெரிந்த தண்டனை கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாய பணிக்காக வெளியே வரும் கைதிகளில் ஒருசிலர் சுற்றுசுவர் இல்லாததால் தப்பியோடி விடுகின்றனர். இதுபோல் கடந்தாண்டு நவம்பர் மாதம் தப்பியோடிய சந்திரன் என்ற கைதி தற்போது வரை சிக்கவில்லை. இந்நிலையில் சிறை மற்றும் கைதிகள் பாதுகாப்பு கருதி மத்திய சிறையை சுற்றிலும் சுமார் 10,000மீ அளவில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டிய இடம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு சுவர் அமைப்பதற்கான செலவினம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

அதன்படி ரூ.10 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அப்போதைய சிறைத்துறை ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் கருத்துருவை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறை முன் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த போவதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் முயன்ற போது குடியிருந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

தற்போது ரூ.10 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கினால் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பதாக கூறப்படுவோரின் நிலை என்ன, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. அதுபோல் சிறை முன்பகுதியில் வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட 10 கிணறுகள் உள்ளது. இவற்றில் 5 கிணறுகள் தூர்வாரப்பட்டு விவசாய பணிக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 5 கிணறுகள் சுற்றுச்சுவர் அமைக்கும் போது தூர்வாரப்பட்டு உபயோகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.