Header Ads

தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையே திருச்சியில் ஹாக்கி போட்டி

Image result for Hockey tournament trichy
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் பொன்விழாவினை முன்னிட்டு காஜாமியான் சுழற்கோப்பைக்கான 17வது ஆண்டு தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி திருச்சியில் துவங்கியது. போட்டிகளை கல்லூரியின் உதவி செயலாளர் ஹாஜி. ஜமால் முகம்மது துவக்கி வைத்தார். முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி அணி 3-1 புள்ளி கணக்கில் உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி அணியை வென்றது. 

இரண்டாவது போட்டியில் அருளானந்தர், கருமாத்தூர் கல்லூரி அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் சிவகாசி அஞ்சா கல்லூரி அணியையும், மூன்றாவது போட்டியில் மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரி அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கொச்சி அக்யுநாஸ் கல்லூரி அணியையும், நான்காவது போட்டியில் சென்னை நஜரத் கல்லூரி அணி 7-1 என்ற புள்ளி கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும் வென்றது. இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.