Header Ads

திருவானைக்காவல் ரூ.4 கோடியில் செலவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மும்முரம்

Image result for thiruvanaikavalதிருவானைக்காவல் கோயிலில் ரூ.4 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மும்முரமாக நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் சுதை சிற்பங்களுக்க வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயில் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாகும். இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக கடந்த 12.7.2000ம் ஆண்டு கும்பாபிஷகம் நடைபெற்றது. அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கும்பாபிஷேகம் நடத்த ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, கோயிலில் உள்ள 11 கோபுரங்கள், 25 விமானங்களுக்கு திருப்பணிகள் தொடங்கும் முன் கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கியது. திருப்பணிகள் பழமை மாறாமல் நடத்தப்படுகிறது. 

தற்போது ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் உள்ள சுதைகளான சிற்பங்கள் மராமத்து பணி செய்யப்பட்டு அனைத்து கோபுரங்களிலும் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் சுதைப்பணிகள் முடிந்து வெள்ளை நிறம் பூசப்பட்ட பின்னர் கோபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு பல நிற வர்ணங்கள் பூசப்படும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து கோபுரங்களிலும் பல நிற வர்ணங்கள் பூசும் பணி தொடங்க உள்ளது. 

மேலும் கோயில் வளாகத்தின் உள்ளே உள்ள பகுதியில் சிறு, சிறு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக 5ம் பிரகாரத்தில் உள்ள மதில் சுவரையொட்டியுள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு மதில் சுவர்கள் மராமத்து பணி நடைபெற உள்ளது. அதனையடுத்து கோயிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளிலும் திருப்பணிகள் துவங்கவுள்ளது. திருப்பணி வேலைகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் கோயில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.