Header Ads

திருச்சி மாவட்டம் வாழை மண்டலமாக அறிவிக்கப்படுமா?

Image result for trichy banana cultivationதிருச்சி மாவட்டம் வாழை மண்டலமாக அறிவிக்கப்படுமா? என காவிரி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் 1.18 லட்சம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 56.50 லட்சம் டன் வாழை உற்பத்தியாகிறது. திருச்சி, நாமக்கல், கரூர், பெரம்ப லுார், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மட்டும் 60 சதவீதம் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் அகில இந்திய அளவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சியில் அமைந்தது.

இந்தியாவிலேயே 60 சதவீதம் வாழை திருச்சி மண்டலத்தில் விளைந்தாலும், விற்பனையிலே மிகுந்த சிரமம் இருந்து வருகிறது. முன்னர் திருச்சி மண்டல வாழை ெபங்களூரு, மைசூரு, கொல்கத்தா, மும்பை, கேரளா என பல மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது. தற்சமயம் எல்லா மாநிலங்களிலும் தங்களின் தேவைகளுக்கான வாழை பயிரிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வாழையை தமிழ்நாட்டுக்குள்ளேயே தான் விற்க வேAண்டி உள்ளது. வாழைத்தார் வெட்டியதில் இருந்து 5 நாட்களுக்குள் விற்காவிட்டால் அழுகி விடும் அபாயமும் இருந்து வருகிறது. வாழைப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என வாழை விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கரூர் மாவட்டம் மகாதானபுரம், திருச்சி மாவட்டம் தொட்டியம், ராச்சாண்டார் திருமலை ஆகிய இடங்களில் வாழை குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. திருச்செந்துறையில் அரசு வாழை ஏல வளாகம் செயல்படுகிறது. காவிரி பாசன விவசாயிகள் நலப்பாதுகாப்பு சங்க செயல் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில், மதுரை வேளாண்மை கல்லூரியும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் இணைந்து வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதுரை வேளாண்மை கல்லூரியில் வாழை சாகுபடி மற்றும் அதனை சார்ந்த தொழில் நுட்பங்கள் பற்றிய தேசிய கருத்துக்காட்சி நடத்துகிறது. 

கல்வி, மதிப்பு கூட்டல், சந்தை படுத்துதல் ஆகியவை பற்றிய கருத்தரங்கம் நடை பெறுகிறது. மதுரையில் நடை பெறும் கண்காட்சியில் திருச்சி மாவட்டத்தை வாழை மண்டலமாக அறிவித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கம்பெனி வேண்டுகோள் வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=742110

No comments

Powered by Blogger.